CALL AUTO: இனி பேரம் இல்லை!


CALL AUTO
இனி பேரம் இல்லை!

ட்டோ டிரைவர்கள் என்றாலே மீட்டர்படி கட்டணம் வசூலிக்க மாட்டார்கள், கூப்பிடும் இடத்துக்கு வர மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எப்போதும் உண்டு. அதே சமயம் முறைப்படி நடந்துகொள்ளும் டிரைவர்-களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பேரம் பேசாமல் ஆட்டோவில் செல்ல முடியுமா? 'முடியும்' என்கிறது 'கால் ஆட்டோ' சேவை நிறுவனம்!

பேரம் இல்லாத கால் டாக்ஸி போல, கால் ஆட்டோவும் இப்போது சென்னைக்கு வந்துவிட்டது. 3999 3999 என்ற எண்ணுக்கு போன் செய்து முகவரியைச் சொன்னால் போதும், வீடு தேடி வந்துவிடுகிறது ஆட்டோ. இந்த ஆட்டோக்களில் உள்ள

எலெக்ட்ரானிக் மீட்டரில் அரசின் விதிமுறைப்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சக் கட்டணம் 14 ரூபாய் (இது முதல் இரண்டு கி.மீ மட்டும்.) அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கும் முறையே 6 ரூபாய். அதோடு சேவைக் கட்டணமாக கூடுதலாக 20 ரூபாய் வசூலிக்கிறார்கள். 'ஒரு ஆட்டோவில் மூன்று பேர்தான் பயணிக்க முடியும். நபருக்கு 35 கிலோ வரை லக்கேஜ் கொண்டுசெல்ல அனுமதி' என்று அனைத்து விஷயத்திலும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick