பெருவாரியோட தங்கச்சி சோலா பூரி!


பெருவாரியோட தங்கச்சி சோலா பூரி!

காலங்காத்தால கொஞ்சம் கதகதப்பா இருக்குமேன்னு டீ சாப்பிட கடைக்குக் கௌம்புனேன். தனியா போனா எப்படியும் நம்மள வம்பிழுத்து நொங்கெடுத்துடுவாய்ங்க. எவனையாவது கூட்டிட்டுப் போனாத்தேன் நம்ம உசுருக்கு உத்தரவாதம்னு ஒவ்வொருத்தனையாத் தேடுனா, ஒரு பயலையும் காணோம்.

ஒருவேளை திருந்தி வேலைக்குக் கீலைக்குப் போறாய்ங்களான்னு எனக்குச் சந்தேகம். திண்ணையில் உக்காந்து பீடி குடிச்சுக்கிட்டு இருந்த ஆறுமுகத்துகிட்ட, 'ஏண்டா ஆறு, நம்ம பயலுகளப் பார்த்தியா?'ன்னு கேட்டேன். 'பயலுகன்னா?'ங்கிறான். சரி, வெவரம் தெரியாமத்தேன் கேக்கிறாம்னு, 'என்கூடவே சுத்திக்கிட்டு இருப்பாய்ங்களே, அஞ்சாறு எடுபிடிக. அவிய்ங்கதேன்'னு சொன்னேன். அதுக்கு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சுக்கிட்டு, 'என்னது, உனக்கு எடுபிடியா? நீயே ஒரு வேலையத்த வெறும்பய... உனக்கெல்லாம் எடுபுடி வேற. போடா... போ'ன்னு நக்கலா பேசிப்புட்டாண்ணே.

அப்பதான் நம்ம கையாளு கண்ணையன் வந்தான். துணை கெடச்சுடுச்சுன்னு கம்பீரமா டீக்கடைக்குப் போனோம்ணே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick