உதிரி பாகங்கள்: எங்கே வாங்குவது லாபம்?


உதிரி பாகங்கள்
எங்கே வாங்குவது லாபம்?

ம் அலுவலக நண்பர்கள் இருவர், கடந்த மாதம் புதிய சான்ட்ரோ காரை வாங்கினார்கள். ஒருவர் கிட்டத்-தட்ட 3 லட்ச ரூபாய் விலையுள்ள xk மாடல் வாங்கினார். மற்றொருவர் வாங்கியது 3.89 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த சான்ட்ரோ GLS மாடல்! இருவர் வாங்கிய காரிலுமே பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், பாடி கலர் பம்பர் என அத்தனை வசதிகளும் இருந்தன.

ஆனால், சான்ட்ரோவை கூடுதல் விலை (3.89 லட்சம்) கொடுத்து வாங்கியவருக்குக் கோபம் பிளஸ் ஏமாற்றம். 3 லட்ச ரூபாயில் சான்ட்ரோ வாங்கியவர், இவருக்கு கூலாகச் சொன்ன பதில்- ''இதில் உள்ள எக்ஸ்ட்ரா பாகங்கள் அனைத்தையுமே வெளிமார்க்-கெட்டில் வாங்கிப் பொருத்தினேன். 89 ஆயிரத்துக்குப் பதிலாக 40,000 ரூபாய்தான் செலவானது!'' என்றார். ''வெளிமார்க்கெட்டிலும் இப்படி வாங்கிப் பொருத்தலாமா?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டவருக்கு, அப்போதுதான் இப்படி ஒரு வழி இருப்பதே புரிந்தது. இதுபோன்று வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் உதிரி பாகங்களை நம்பி வாங்க-லாமா? இவை உண்மையிலேயே விலை குறைவு-தானா? என்ற கேள்வி-களுடன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தோம்.

வேரியன்ட் குழப்பம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick