இயந்திரம் பேசுகிறது: இன்ஜின்!


இயந்திரம் பேசுகிறது (5)
என்று தணியும் இந்த வெப்பம்!

னிதஉடலுக்குள் ரத்த ஓட்டம் எவ்வளவு முக்கியமோ அதேபோல, நான் இயங்கும்போது, ஆயிலும் கூலன்ட்டும் எனக்குள் பாய்ந்துகொண்டே இருக்க வேண்டும். இந்த ஓட்டம் தடைபட்டால், ஹார்ட் அட்டாக் வருவது போல என் இயக்கம் நின்றுவிடும். எனவே, ஆயில், கூலன்ட் ஆகியவற்றின் வேலைகள் என்னென்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

வெப்பம் அவசியம்!

நான் இயங்கத் துவங்கும்போது எனக்குள் வெப்பம் அவசியம். காரணம், வெளியே இருந்து உறிஞ்சப்படும் காற்றை வெப்பப்படுத்தி வெடிக்கவைக்க வேண்டுமல்லவா! என் அனைத்து உறுப்புகளும் சில்லிட்டுப் போயிருந்தால், காற்றை வெப்பமடையவைப்பது சற்றுச் சிரமம். பெரும்பாலும், குளிர்ப் பிரதேசங்களில், வாகனத்தை காலையில் இயக்க முயற்சிக்கும்போது கடினமாக இருக்கும். அதனால்தான் வாகனங்களில் 'ஹீட்டர்' என்ற சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது, சிலிண்டர்களுக்குள் செல்லும் காற்றைச் சூடுபடுத்தி அனுப்பும்போது, அதை வெடிக்கவைப்பது எனக்குச் சற்றுச் சுலபமாக இருக்கும். அதேசமயம், அளவுக்கு அதிகமாகவும் வெப்பம் இருக்கக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick