கொழுக் மொழுக் கபசினோ!

ஸ்போர்ட்ஸ் கார் - SUZUKI CAPPUCCINO

ன்ன கார் தயாரிப்பில் புகழ் பெற்ற ஜப்பான் சுஸ¨கி நிறுவனம், சிறிய வகை ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை 1989-ம் ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தி, ஸ்போர்ட்ஸ் கார் மார்க்கெட்டைக் கலக்கியது. மிக வித்தியாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த காருக்கு 'சுஸ¨கி கபசினோ’ (Suzuki Cappuccino) என்று பெயரிட்டது. ஸ்போர்ட்ஸ் கார் ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத 'கொழுக் மொழுக்’ காராகத் திகழும் இதற்குப் பல தனித்துவங்கள் உண்டு.

 ஜப்பானுக்காக உருவாக்கப்பட்ட இந்த கார், இன்ஷூரன்ஸ் மற்றும் வரி விதிப்பு காரணங்களுக்காக 3295 மிமீ நீளத்தில், 725 கிலோ எடையுடன் வடிவமைக்கப் பட்டது. 675 சிசி கொள்ளளவு கொண்ட மூன்று சிலிண்டர், வாட்டர் கூல்டு, டர்போ சார்ஜர் பொருத்திய இதன் இன்ஜினை, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் அளித்தது சுஸ¨கி. இந்த கார் அதிகபட்சமாக 63 bhp சக்தியை 6300 ஆர்பிஎம்-ல் அளித்தது. மேலும், எடை குறைவான இதன் இன்ஜினின் பிந்தைய மாடல்களில் ஓவர்ஹெட் கேம் சாஃப்ட், செயின் ட்ரைவ் கொண்டு தயாரிக்கப்பட்டன. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த காரில், முன் பக்க இன்ஜினும் ரியர் வீல் ட்ரைவ் கொண்ட காராக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்