பைக் இன்ஜினில் பறக்கும் கார்!

சூப்பர் கார் - SPARTAN-V

க்கில் கார் இன்ஜினைப் பொருத்தி, பர்ஃபாமென்ஸை அதிகரிப்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், பைக் இன்ஜினை வைத்து ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பவர்களைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியம்தான் ஏற்படும். ஆம், இந்த வித்தியாசமான காரில் இருப்பதுகூட ஒரு பைக்கின் இன்ஜின்தான். ஆனால், ஏதோ ஒரு பைக் அல்ல... 'டுகாட்டி 1198-எஸ்’ எனும் புகழ் பெற்ற பைக்கின் சக்தி வாய்ந்த வி-ட்வின் (V-Twin) இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்பார்ட்டன் (spartan)  நிறுவனம், எடை குறைந்த ரேஸிங் ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் புதிய படைப்புதான் இந்த 'ஸ்பார்ட்டன்-வி.’ சின்ன பொம்மை கார் போல் தோற்றமளிக்கும் இந்த காரில், இரண்டு பேர்  மட்டுமே அமர முடியும். காரின் பாடி முழுவதும் எடை குறைந்த, அதே சமயம் வலுவான கார்பன் ஃபைபர் பேனல்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அழகிய வடிவத்தின் உள்ளே ஒளிந்திருக்கிறது காரின் முக்கிய அம்சமான ஸ்பேஸ் ஃபிரேம்(Space Frame) சேஸி. ட்யூப்லர் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் சேஸி, டுகாட்டி பைக்குகளில் இருக்கும் டிரெல்லீஸ் (Trellis)ஃ ப்ரேம் போலவே காட்சியளிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்