GREAT ESCAPE - மஹிந்திரா ஆஃப் ரோடர்

பார்த்தேன்... ரசித்தேன்... மலைத்தேன்!

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக மஹிந்திரா நிறுவனம் இந்த 'கிரேட் எஸ்கேப்’ எனும் ஆஃப் ரோடிங் பந்தயத்தை நடத்தி வருகிறது. நீங்கள்

பொலேரோ, ஸ்கார்பியோ என எந்த மஹிந்திரா தயாரிப்புகள் வைத்திருந்தாலும் இந்த சாகசத்தில் கலந்து கொள்ள அதுதான் டிக்கெட். மேடு பள்ளம், சேறு, குன்று என சவால்கள் நிறைந்த வனப் பாதைகளில் வாகனத்தை ஓட்ட வைத்து இந்தப் பந்தயத்தை நடத்துகிறார்கள். சொல்லப் போனால், 'யார் ஃபர்ஸ்ட்? யார் செகண்ட்?’ என்பது மாதிரியான போட்டியெல்லாம் இதில் இல்லை. கரடு முரடான மலைப் பகுதிகளில் மஹந்திராவின் வாகனங்களை ஓட்டுவதில் இருக்கும் த்ரில்லை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான் இந்தப் பந்தயத்தின் நோக்கம்.

 மூணாறு, கூர்க், கோவா, வயநாடு போன்ற பரவசமான பிரதேசங்களில் நடைபெறும் இந்த சாகசப் பயணம், இந்த முறை ஊட்டியில் நடத்தப்பட்டது. மஹிந்திரா நடத்தும் 63-வது கிரேட் எஸ்கேப் இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்