டாக்டர் விகடன்

>>சார்லஸ்>> பொன்.காசிராஜன்

ப்போதுமே காருக்குள் கூலிங் கிளாஸ் வைத்திருப்பது மிகவும் நல்லது. 'ஆன்ட்டி கிளார்’ மற்றும் 'போலரைஸ்டு’ கண்ணாடிகள் கண் கூசுவதைத் தடுக்கும். அதேபோல், இரவில் கார் ஓட்டும்போதும் 'நைட் விஷன்’ என ஸ்பெஷல் கண்ணாடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை அணிந்து கார் ஓட்டலாம். ஆனால், கூடுமானவரை இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 

கார் ஓட்டுவதற்கு முன்பு ரியர்வியூ கண்ணாடிகள், பக்கவாட்டுக் கண்ணாடிகள் - டிரைவர் சீட்டில்

 
உட்கார்ந்து பார்க்கும்போது, பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டிஃபென்சிவ் டிரைவிங்தான் நம் ஊருக்கு சரியான டிரைவிங் முறை. நம்மைச் சுற்றி வரும் வாகனங்கள் எந்த வேகத்தில் வருகின்றன; எந்த மாதிரியான சாலையில் பயணம் செய்கிறோம்; சாலையின் கண்டிஷன் ஆகியவற்றுக்கு ஏற்றபடி காரை ஓட்ட வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்தைவிட நீங்கள் குறைந்தது 10 மீட்டர் அல்லது 15-20 விநாடிகளாவது வேகம் குறைவாக இருக்க வேண்டும். விண்ட் ஸ்கிரீன் மற்றும் பின்பக்கக் கண்ணாடிகள் அழுக்குப் படிந்து இல்லாமல், தெளிவாக இருந்தால்தான் முன்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடியும்!

கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்த மஹிந்திரா பொலேரோ வாகனம், சாலையின் ஓரத்தில் நின்ற லாரி மீது மோதி கடுமையான விபத்துக்குள்ளானது. காருக்குள் ஐம்பது வயதான பெரியவர் ஒருவரும், அவருடைய மனைவியும் இருந்தனர். ஓவர் ஸ்பீடு இல்லை; குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை; ஆனாலும், எப்படி நடந்தது இந்த விபத்து என்று ஆராய்ந்ததில், கார் ஓட்டியவருக்குக் கண் பார்வையில் இருந்த சின்னக் குறைபாடுதான் காரணம் எனத் தெரிய வந்தது!

நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதுவது, சென்டர் மீடியனில் இடித்து விபத்து உண்டாவது, ஓவர்டேக் செய்ய வரும் வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாவது என இதுபோன்ற விபத்துகளைப் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். 'இப்படிப்பட்ட விபத்துகளில் சிக்குபவர்கள் பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இதற்குக் காரணம், ஓட்டுநரின் கண் பார்வையில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகள்தான்’ என்கிறார்கள் டாக்டர்கள்.

''பொதுவாக 40-45 வயதைக் கடந்துவிட்டாலே கண்ணில் உள்ள லென்ஸில்(விழியாடி) 'கிளார்’ விழ ஆரம்பிக்கும். லென்ஸின் நிறம் மஞ்சளாக மாறும். கண் லென்ஸ் கடினமாகும். கேட்டராக்ட் அபாயமும் அதிகரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் வெளிச்சத்தைப் பார்க்கும்போது அதிகமாக கண் கூசும். சுற்றுப் பார்வை குறைந்துவிடும். அதாவது, நேரில் வரும் வாகனங்கள், பொருட்கள் நன்றாகத் தெரியும். ஆனால், பக்கவாட்டில் உள்ள வாகனங்கள் உள்பட, சுற்றி உள்ளவை தெரியாமல் போய்விடும்.

பல பேருக்கு நம்முடைய சுற்றுப் பார்வை சரியாக இல்லை என்பதே தெரியாது. சுற்றுப் பார்வை குறைவதுதான் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது'' என்கிறார் அகர்வால் கண் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் திரிவேணி.

''நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே கண்களை செக்-அப் செய்ய வேண்டியது அவசியம். கேட்டராக்ட் இருப்பவர்கள், கண் அழுத்த நோய் (glaucoma)உள்ளவர்கள் கார் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களை செக்-அப் செய்ய வேண்டும். வெயில் நேரங்களில் கார் ஓட்டும்போது 'ஆன்ட்டி-கிளார்’ அல்லது போலரைஸ்டு கண்ணாடிகளை அணிந்துகொண்டு கார் ஓட்ட வேண்டும். அதேபோல், அதிக வேகத்தில் கார் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும். வேகமாகச் செல்லும்போது காரில் அதிர்வுகள் ஏற்படும். இந்த அதிர்வுகள் கண் பார்வையையும், சாலையின் மேல் உள்ள கவனத்தையும் குறைக்கும். இதன் மூலம் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதேபோல், இரவு நேரத்தில் கார் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் 30 வயதானவர்கள் கார் ஓட்டுவதைவிட 50 வயதுக்கு மேலானவர்கள் கார் ஓட்ட இரண்டு மடங்கு கான்சன்ட்ரேஷன் தேவை. கண்களைக் கூச வைக்கும் ஹெட் லைட்டுகள் இப்போது பெருகிவிட்டன. ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இரவு நேரங்களில் கார் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

கார் ஓட்டும்போது ஜட்ஜ்மென்ட் மிகவும் முக்கியம். அதாவது, முன்னால் செல்லும் வாகனத்துக்கும் நமக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது; பக்கவாட்டில் செல்ல முடியுமா; முன்னால் செல்லும் வாகனத்தை முந்த முடியுமா என அனைத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டியது கண்கள்தான். அதனால், எப்போதுமே கண்களை அலட்சியம் செய்யாதீர்கள். நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிச்சயம் கண்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சில பேர், 'கண்ணில் கோளாறு இருக்கிறது, கண்ணாடி அணிய வேண்டும்’ என்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். வயதானால் முடி நரைப்பதுபோலத்தான் கண்களில் பிரச்னை ஏற்படுவதும். பெருகி வரும் வாகனப் போக்குவரத்தில், விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்ள கண்களைக் கவனிப்பதுதான் முக்கியம்! கண்ணில் சிறு குறை இருந்தாலும், அதனை உடனடியாகச் சரி செய்த பின்னரே, கார் ஸ்டீயரிங்கைத் தொட வேண்டும்!'' - அழுத்தமான வார்த்தைகளில் அக்கறை பகர்கிறார் டாக்டர்  திரிவேணி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick