யமஹா போல வருமா?

பைக் ரீ-ஸ்டோரேஷன் - யமஹா ஆர்எக்ஸ் - 135

எஸ்.ஷக்தி   கே.ஆர்.வெங்கடேஸ்வரன் 

கோவையைச் சேர்ந்த ராம் பிரசாத், தனது பல்ஸரை விற்றுவிட்டு பழைய யமஹா ஆர்எக்ஸ்-135 பைக் ஒன்றைத் தேடி வாங்கி, அதை முழுக்கப் புதுப்பித்து ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.

''பல்ஸரைக் கொடுத்துட்டு இதை வாங்கணுமா? என்று சிலர் கேட்கிறார்கள். எனக்கு 2 ஸ்ட்ரோக் பைக் வாங்கி ஓட்ட வேண்டும் என ரொம்ப நாளாக ஆசை. யமஹா ஃபேமிலியில் 2 ஸ்ட்ரோக் வித் 5 கியரோட வந்த ஃபர்ஸ்ட் பைக் இதுதான். யமஹா ஆர்எக்ஸ்-135, 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பைக் எங்கேயாச்சும் கிடைக்காதான்னு ஏங்கிட்டிருந்தப்ப தான் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருத்தர்கிட்டே இந்த பைக் இருக்கிறதா சொன்னாங்க.

அங்க போய் பார்த்தப்ப ஓட்டவே முடியாத நிலைமையில மோசமா கிடந்துச்சு. பொதுவா, இந்த பைக்கை 10,000 கி.மீ.க்கு ஒரு தடவை கண்டிப்பா கார்புரேட்டரை கிளீன் பண்ணணும். இல்லேன்னா சைடு ஸ்டாண்டு போடுறப்ப பெட்ரோல் ஒழுகும். இந்த மாதிரியான பராமரிப்பு விஷயங்கள் எதையுமே அவங்க பண்ணவே இல்லை. கூடவே குறைஞ்சது மூன்றரை வருஷமா பைக்கை ஓட்டாமப் போட்டு வெச்சிருந்தார். எல்லா சிக்கல்களும் தெரிஞ்சிருந்தாலும்கூட ஃபுல் ரிஸ்க்கோட பைக்கை கோவைக்கு எடுத்துட்டு வந்தேன்.

இந்த பைக்குக்கு ஃபிட்டான பிஸ்டன் கிடைக்கலை. அதனால, தாய்லாந்துல இருந்து நண்பர் மூலமா வரவழைச்சு மாட்டினேன். கோவையில ஆரம்பிச்சு சிங்கப்பூர் வரை தொடந்து தேடுதல் வேட்டை நடத்தி கிராங்க் சாஃப்ட், கிக்கர்னு ஒவ்வொரு பார்ட்ஸா கலெக்ட் பண்ணினேன். பைக்கை மொத்தமா ரெடி பண்ணி முடிக்க எட்டு மாசமாயிடுச்சு!

இப்போதைக்கு வாரத்துக்கு ரெண்டு தடவைன்னு ஆசைக்காக இதை ஓட்டிக்கிட்டு இருக்கேன். பக்காவா செட் ஆனதும் என்னோட போக்குவரத்தே இதுலதான்னு ஆகிடும். சரியான டைம்ல ஆயில் மாத்தி, பக்காவா மெயின்டெய்ன் பண்ணினா நிச்சயமா ரெண்டு லட்சம் கிலோ மீட்டர் வரை ஓட்டலாம்!'' என்று ஒரு மெசேஜ் வைத்து முடித்தார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick