ப்ப்ப்ப்பூ.... இவ்வளவுதானா!!!!

ளைந்து நெளிந்து லாவகமாக ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களாக

இருந்தாலும், சென்டர் ஸ்டாண்ட் போட்டு ஸ்கூட்டரை நிறுத்துவது என்றால் மட்டும் ஜகா வாங்கிவிடுகிறார்கள். 'சரி, ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களில் எத்தனை பேருக்கு சென்டர் ஸ்டாண்ட் போடத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்... பார்த்துவிடலாம்’ என சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ் பார்க்கிங் ஏரியாவில் ஆஜரானோம். ''ஸ்கூட்டர் ஓட்டுறதுல நாங்க எல்லாம் கில்லிகள் தெரியுமா?'' என்று பீட்டர் விட்டபடியே, ''ஓகே... நாங்க தயார்...'' என சவாலுக்குத் தயாரானார்கள்.

 முதலில் வந்தார் எழிலரசி, ''சிங்கம் ஒன்று புறப்பட்டதே...'' என்று பாட்டுப் பாடி அவரை உசுப்பேத்தினார்கள் சக மாணவிகள். ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியவர், பதினைந்து நிமிடத்தில் ஒரு வழியாக சென்டர் ஸ்டாண்டைப் போட்டு முடித்தார். அவருக்கு நாம் கூல்ட்ரிங்க்ஸ் ஸ்பான்ஸர் செய்யவும், ரிலாக்ஸ் ஆகி ஓரமாக அமர்ந்தார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்