பிஎம்டபிள்யூ 330i ஸ்போர்ட்ஸ்

பிஎம்டபிள்யூவை ஒவ்வொரு மாணவ மாணவியரும் ஒவ்வொரு கோணத்தில் வரைந்தார்கள்

 

ஆடி A4 காருக்கு பிஎம்டபிள்யூ சொல்லும் பதில்தான் 330i  ஸ்போர்ட்ஸ். இந்த நாற்பது லட்ச ரூபாய் காரும், நான்கு நாட்களும் இருந்தால், நான்கு திசைக்கும் போய் வரலாம்! ஆனாலும், பிஎம்டபிள்யூ 650 வீ காரும் இதுவும் ஒரே நேரத்தில் வந்துவிட்டதால், இதை ஒரே ஒருநாள் பிக்னிக்குக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டோம். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிக்னிக் ஸ்பாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது தெரிந்த விஷயம்தான். த்ரில்லிங்கான அட்மாஸ்பியரை உண்டு பண்ணும் சவுக்குத் தோப்புகள், ஆளரவமற்ற கடற்கரைகள், படகுக் குழாம்கள், முதலியார் குப்பத்துக்குச் சற்று முன்னால், 'தமிழ்நாட்டின் வெனீஸ்’ என்று ஓவராக பில்ட்-அப் கொடுத்துக் கொண்டாலும் கண்ணுக்கு விருந்தாக இருக்கும் நீர் நிலைகள், ஓவியர்களின் வேடந்தாங்கலான சோழமண்டலம் கிராமம், ஆயிரம் முதலைகளைக் கொண்ட குரோக்கடைல் பார்க், டிரைவ் இன் ஓட்டல்கள், டிரைவ் இன் தியேட்டர், சரித்திரத்துக்குச் சான்றாக விளங்கும் சிற்பக் கலைக் கூடங்கள், தீம் பார்க்குகள் என்று ஈசிஆர் சாலையில் மாயாஜாலம் காட்ட எத்தனை எத்தனையோ இடங்கள். இருந்தாலும் நாம் பிக்னிக் செல்லத் தேர்ந்தெடுத்தது நமது கலாசாரப் பெருமைகளை எடுத்துச் சொல்லும் தக்ஷின் சித்ரா.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்