சாம்பியன் வெட்டல்!

>>சார்லஸ் 

 

சாம்பியன் பட்டத்தை, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். சிங்கப்பூர் மற்றும் கொரியாவில் வெற்றி பெற்று, 349 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் வெட்டல். 2009-ம் ஆண்டு ரெட்புல் அணியில் இடம் பிடித்து, அந்த அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தார் வெட்டல். அதோடு இல்லாமல், சாம்பியன்ஷிப் பட்டியலிலும் இரண்டாம் இடம் பிடித்தார். 2010-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி, 23 வயதில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் வெட்டல். இந்தியாவில் ஃபார்முலா-1 ரேஸ் நடப்பதற்கு முன்பாகவே, சாம்பியன் பட்டத்தை வெட்டல் கைப்பற்றி விட்டதால், இந்திய ரேஸுக்குப் பரபரப்பு கொஞ்சம் குறைவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்