கார்லோஸ் சொக்காவின் சாதனைப் பயணம்!

WSBK சாம்பியனுக்கு வயது 40வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

 

ரேஸில் வெற்றி பெறுவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கார்லோஸ் செக்கா. மணிக்கு 300 கி.மீ வேகத்துக்கு மேல் பறக்கக் கூடிய, உலகின் அதிவேக சூப்பர் பைக்குகள் மோதும் சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை வென்றிருக் கிறார் 40 வயதான கார்லோஸ் செக்கா. 2010-ம் ஆண்டு மோட்டோ ஜீபி ரேஸ் வீரராக இருந்து, இந்த ஆண்டு சூப்பர் பைக் ரேஸ¨க்குத் திரும்பியவர் செக்கா! 

1993-ம் ஆண்டு முதன்முதலாக பைக் ரேஸுக்குள் அடியெடுத்து வைத்தார் கார்லோஸ் செக்கா. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பைக் ரேஸராக பல்வேறு ரேஸ் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கும் செக்காவின் முதல் சாம்பியன் பட்டம் இது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் சாம்பியன் பட்டம் வெல்வதும் இதுதான் முதன்முறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்