விண்டோ ஷாப்பிங்

ன்றைய கார்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகி விட்டது ப்ளூ-டூத் தொழில்நுட்பம். தற்போது விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த கார்களில் 'இன்பில்ட் ப்ளூ-டூத்’ வசதியே இருக்கிறது. இதன் மூலம் காரில் பயணிக்கும்போது போனில் பேசவும், பாடல்களை மாற்றவும் முடியும். ஆனால், விலை குறைந்த கார்களிலும் இந்த வசதியைப் பொருத்திக் கொள்ள முடியும். ப்ளூ-டூத் கார் கிட் தயாரிப்பில் டென்சன் நிறுவனம் கில்லி. 'ப்ளக் அண்டு ப்ளே’ என்று சொல்லப்படும் இந்த ப்ளூ-டூத் கிட்-ஐ காரின் டேஷ் போர்டில் பொருத்திவிட்டு, ஒரு மைக்கையும் இணைக்க வேண்டும். முதல் முறை உங்கள் போனையும் இந்த ப்ளூ-டூத் கிட்டையும் 'பேர்’ செய்து விட்டால் போதும். அதன் பிறகு காருக்குள் நீங்கள் ஏறி விட்டாலே போன் - ப்ளூ-டூத் கிட் உடன் ஆட்டோமேட்டிக்காக இணைந்துவிடும். ஸ்டீயரிங்கில் இருக்கும் பட்டனைத் தட்டிவிட்டு போன் பேசலாம். அதேபோல், உங்கள் போனில் இருக்கும் பாடல்களை கார் ஸ்பீக்கர் மூலமாகவும் கேட்கலாம். காரில் ஆடியோ சிஸ்டமே இல்லை என்றாலும், போர்ட்டபிள் ப்ளூ-டூத் கிட்டை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்