என் முதல் புல்லட்! - கிஷோர்

 

டிகர் கிஷோர். அலட்டல் இல்லாத ஆழமான நடிப்பில் மிரட்டும் வில்லன். இவர் ஒரு பைக் காதலர் என்பதுதான் ஆச்சரிய செய்தி. 'பொல்லாதவன்’ நாயகன் தனுஷ், பல்ஸரின் மீது கொண்ட வேட்கையைப் போல, அதில் வில்லனாக நடித்த கிஷோருக்கும் நிஜ வாழ்வில் புல்லட் மீது அளப்பரிய காதல்! பெங்களூருவில் வசிக்கும் இவர், உள்ளூர் ஷாப்பிங் மால் ஆரம்பித்து வெளியூர் ஷூட்டிங் ஸ்பாட் வரை, தன் புல்லட்டில்தான் பயணம் செய்கிறார். தற்போது 'வன யுத்தம்’ எனும் படத்தில் வீரப்பன் வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் கிஷோரை, பெங்களூருவின் ஓர் இளங்காலைப் பொழுதில் சந்தித்தேன். 

 ல்லாரையும் போலவே எனக்கும் விதவிதமான பைக், ரேஸிங் கார் என ஆட்டோமொபைலின் அத்தனை அங்கங்களும் பிடிக்கும். ஆனால், புல்லட் மீது மட்டும் கொல வெறி! அதனுடைய 'தட் தட்’ பீட் சவுண்ட், உருவம், ஸ்டைல்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். புல்லட் மீது அவ்ளோ கிரேஸ்! என் இளவயதில் நான் பார்த்த படங்கள், நான் வசித்த தெருவில் இருந்த புல்லட் அங்கிள், பெங்களூரு நகரம் என என்னைச் சுற்றி புல்லட் ராஜ்ஜியம்தான். புல்லட் மீது எனக்கு இன்றும் தனியாத மோகம் இருக்க இவையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் பைக் வாங்கித் தரும் அளவுக்கு குடும்பப் பொருளாதாரம் இல்லை. படிக்கும்போதே, 'வாழ்க்கையில் சொந்தமாக ஒரு புல்லட் வாங்க வேண்டும்’ என்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது'' என்றவர், கியரை மாற்றினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்