மஹிந்திராவின் மாஸ்டர் பிளான்!

 

ந்தியாவில் இரு சக்கர வாகன மார்க்கெட், குறிப்பாக ஸ்கூட்டர் மார்க்கெட் சரிந்துகொண்டு இருந்த சமயத்தில், கைனடிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார் ஆனந்த் மஹிந்திரா. 'ஸ்கூட்டர்களுக்கு இனிமேல் இந்தியாவில் எதிர்காலம் இல்லை’ என அறிவித்து, ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இருந்து ராஜீவ் பஜாஜ் விலகிய சமயம் அது. ஜூலை, 2008-ம் ஆண்டு கைனடிக் நிறுவனத்தை வாங்கியது மஹிந்திரா. 'இரு சக்கர வாகன மார்க்கெட் சரிவைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், எதற்காக இதில் இறங்குகிறீர்கள்? நஷ்டக் கணக்கு காட்டவா?’ என்றெல்லாம் ஆனந்த் மஹிந்திராவை நோக்கி கேள்விகள் எழுந்தன. ''உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மோட்டார் சைக்கிள்கள் அதிகம் விற்பனை செய்யும் நாடு இந்தியா. ஆண்டுக்கு 1 கோடி இரு சக்கர வாகனங்கள் இங்கு விற்பனை ஆகின்றன. இருந்தும் 80 சதவிகித இந்திய வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் இல்லை. எல்லோருமே நேரடியாக கார் வாங்க மாட்டார்கள். நம் நாட்டில் ஸ்கூட்டர், பைக், கார் என படிப்படியாக வாகனங்களை வாங்குபதுதான் நடைமுறை. நகருக்குள் அதிகம் பயன்படுத்த ஸ்கூட்டர்; ஆஃபீஸுக்குப் போய் வர பைக்; குடும்பத்தோடு பயணிக்க கார் என வாடிக்கையாளர் வளர வளர, அவர்களோடு மஹிந்திராவும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். 2 வீலர் பிசினஸை வெற்றிகரமான பிசினஸாக அமைத்துக் காட்டுகிறேன்!' என்று தெள்ளத் தெளிவாகப் பேசினார் ஆனந்த மஹிந்திரா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்