பஞ்சர் போடுவது எப்படி?

ட்யூப் லெஸ் டயர்

ட்யூப் லெஸ் டயர் பஞ்சர் போட வேண்டும் என்றால், இதற்கான பஞ்சர் ரிப்பேர் கிட் வேண்டும். இதன் விலை 200 ரூபாயில் இருந்தே கிடைக்கிறது. அனைத்து டயர் டீலர்களிடமும் இந்த ரிப்பேர் கிட் கிடைக்கும்.

மாடர்ன் பெண்களுக்கு ட்யூப் டாப்தான் லேட்டஸ்ட் ட்ரென்ட். அதுபோல, மாடர்ன் பைக்குகளிலும் ட்யூப் லெஸ் டயர்கள்தான் இப்போதைய ஃபேஷன். பஜாஜ் பல்ஸர் 200 மற்றும் 220, யமஹா FZ 16, யமஹா ஆர் 15, ஹோண்டா சி.பி.எஃப் ஸ்டன்னர் போன்ற பிரீமியம் பைக்குகளில் ட்யூப் லெஸ் டயர்களில்தான் ஓடுகின்றன. க்ரிப் மற்றும் ஹேண்டிலிங் இரண்டுமே இதன் பிளஸ். அதுமட்டுமல்ல, இந்த டயர் சீக்கிரத்தில் பஞ்சர் ஆகாது, அப்படியே ஆனாலும் உடனே காற்று இறங்காது.
 

Click to enlarge..

Click

ஆனாலும், இது பஞ்சர் ஆகிவிட்டால் பைக் வைத்திருப்பவரின் பாடு திண்டாட்டம்தான். காரணம், சாதாரண பஞ்சர் கடைகளில் இருப்பவர்கள் எவருக்கும் ட்யூப் லெஸ் டயர் பஞ்சர் போடத் தெரியாது என்பதோடு, அவர்களிடம் அதற்கான உபகரணங்களும் இல்லை. பைக் ஷோரூமுடன் இருக்கும் சர்வீஸ் சென்டருக்குச் சென்றுதான் பஞ்சர் போட வேண்டும். ஆனால், 'ட்யூப் லெஸ் டயர்களை பஞ்சர் போடுவது மிகவும் ஈஸி' என்று சொல்லிவிட்டு, மோட்டார் விகடனுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார் யமஹாவின் சர்வீஸ் மேலாளர் ராஜேஷ்.

சார்லஸ், பத்ரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick