டாப் ஸ்பீடு 339!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

 

ரேஸ் பைக்குகளின் உண்மையான வேகத்தைப் பார்க்க வேண்டுமா? அதற்கு நீங்கள் ஸ்பெயினில் உள்ள அரகான் ரேஸ் மைதானத்துக்குத்தான் செல்ல வேண்டும்! உலகின் ஹை-ஸ்பீடு ரேஸ் டிராக் இது. இந்த மைதானத்தில், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் எட்டாவது சுற்று ஜுலை 1-ம் தேதி நடைபெற்றது. மணிக்கு 320 கி.மீ வேகம் வரை பறக்கக்கூடிய இந்த ரேஸ் டிராக்கில், வளைவில் திரும்புவதற்கு என்று சட்டென 60 கி.மீ வரை வேகத்தைக் குறைக்க வேண்டியது இருக்கும். இந்த ரேஸ் டிராக்கில் எம்டிசி அணியின் டேவியஸ் மணிக்கு 339 கி.மீ வேகம் வரை பறந்து டாப் ஸ்பீடைப் பதிவுசெய்து இருக்கிறார். ரேஸர்களுக்கு மிகவும் சவாலான ரேஸ் டிராக்கான அரகானில் நடந்தது என்ன? 

இந்த ஆண்டு, எல்லா தகுதிச் சுற்றுகளிலும் வேகமாக இருக்கும் கவாஸாகி ஞீஙீ10ஸி பைக்தான் அரகான் ரேஸ் மைதானத்திலும் முதல் இடம் பிடித்தது. அந்த அணியின் டாம் சைக்ஸ் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்து ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார். டாம் சைக்ஸ், இதுவரை நடந்த எட்டு சுற்றுகளில், ஆறு சுற்றுகளில் முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரில்லா அணி வீரர்கள் மேக்ஸ் பியாஜி இரண்டாம் இடத்தில் இருந்தும், யூஜின் லாவெர்ட்டி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்