மார்க்கெட் பிளான் மாருதி சுஸூகி

 

ந்தியாவின் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளர் மாருதி சுஸ¨கி. இந்த நிறுவனத்துக்கு இது சவாலான காலகட்டம். இந்தியாவில் விற்பனையாகும் பத்து கார்களில் ஐந்து, மாருதியின் தயாரிப்புகள்தான். ஆனால், இப்போது தொழிலாளர் பிரச்னை, சின்ன கார்களைத் தவிர மிட் சைஸ் மற்றும் பிரீமியம் கிளாஸ் கார்கள் விற்பனையில் சறுக்கல், ஜெர்மன் கார்களின் வருகையும் போட்டியும் அதிகரித்திருப்பதுடன் மக்கள் ஸ்டைலான, சொகுசான கார்களை நோக்கிப் பறக்கும் வேகம், மாருதியை நெருக்கடியில் தள்ளி இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் மாருதியின் மார்க்கெட் ஷேர் தடாலடியாக ஐந்து சதவிகிதம் குறைந்திருப்பதே இதற்குப் பெரிய சாட்சி. 

இந்தியாவில் 1981-ம் ஆண்டு, இந்திய அரசுடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் தனது  கணக்கைத் துவங்கியது ஜப்பானின் சுஸ¨கி நிறுவனம். இந்தியாவில் முதலில் கடை திறந்த வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்திய மார்க்கெட்டைக் கரைத்துக் குடித்துவிட்டது மாருதி சுஸ¨கி. அதனால்தான், இந்தியாவில் மட்டுமே இதுவரை 1 கோடி கார்களை விற்பனை செய்திருக்கிறது அது. கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்துள்ளது மாருதி. குறைந்த விலை, அதிக மைலேஜ் - இவை இரண்டும்தான் இந்தியர்களின் முதல் முக்கியத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி கார்களை விற்பனை செய்து வருவதே விற்பனை உயர்வுக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்