அந்தரத்தில் பறந்த பீட்!

 

ந்தரத்தில் பறக்கும் பிளாஸ்டிக் செவர்லே பீட், இத்தாலிய நடன அழகிகள், அமெரிக்க இசைக் குழு என ஆட்டோ எக்ஸ்போவையே அதகளப்படுத்தியது ஜெனரல் மோட்டார்ஸ். மொத்தம் 15 கார்கள் ஜெனரல் மோட்டார்ஸ் அரங்கத்துக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எம்பிவி காரும் அடக்கம். இது, சீனாவின் 'உள்ளிங் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் சி-100 கார்தான். உள்ளிங் நிறுவனத்தை வாங்கி விட்ட ஜெனரல் மோட்டார்ஸ், செயில் காரையும் இந்த எம்பிவி காரையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. 

செவர்லே கார்களுக்கே உரித்தான டிசைன் இல்லை என்றாலும், எம்பிவி கார்களுக்கே உரிய எளிமையான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த செவர்லே எம்பிவி. ஏழு பேர் உட்காரக்கூடிய இந்த காரில், பின் இருக்கைகளில் ஆட்கள் இல்லை என்றால், அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு, பொருட்களை வைத்துக்கொள்ள முடியும். 94.6 bhp சக்தி கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினையும் இதில் அறிமுகப்படுத்த இருக்கிறது செவர்லே. டொயோட்டா இனோவா மற்றும் மஹிந்திரா ஸைலோ கார்களுடன் போட்டிப் போட இருக்கும் இந்த கார், 6 லட்ச ரூபாய் விலைக்கு விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. செவர்லேவின் திட்டப்படி 6 லட்ச ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வந்தால், இது எம்பிவி மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை எளிதில் பிடித்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்