ஈரோட்டில் அமெரிக்கன் ஜீப்!

ச.ஆ.பாரதி  க.தனசேகரன்

 

ரோடு நகரில் உலவும் அந்த வாகனத்தைப் பார்ப்பவர்கள், 'அட...பெட்ரோல் பங்க் முருகேசன் ஜீப்’ என்று எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஒரு வாகனம், தனி ஒரு மனிதனின் அடையாளமாக மாறுவது அபூர்வமாகத்தான் நிகழும். அப்படிப்பட்ட வாகனம் இந்த 'லோ பானெட்’ ஜீப்! இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்ட இந்த அமெரிக்க ஜீப்புகளுக்கு, உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஃபோர்டு மற்றும் வில்லீஸ் ஆகிய நிறுவனங்கள்தான் இந்த வகை ஜீப்புகளை அப்போது அமெரிக்க ராணுவத்துக்குத் தயாரித்து அளித்தன. இன்றைக்கு இந்த ஜீப்புகள் உலக நாடுகளில் எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டன. தோற்றத்தில் மட்டுமல்லாமல், உழைப்பிலும்  தனக்கென ஓர் தனி இடத்தைப் பிடித்தது இந்த வகை ஜீப். அப்படிப்பட்ட இந்த ஜீப்பை, கடந்த 18 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன். பெட்ரோல் பங்க், விவசாயம் என பல தொழில்கள் இருந்தாலும், அவருடைய அடையாளமே இந்த ஜீப்தான் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்