கார் ஹேக்கிங்!

உஷார்.. உஷார்!

சார்லஸ்

 

காரைப் பாதுகாக்க 'சென்டர் லாக்கிங்’ இருந்தால் போதும்; கூடுதல் பாதுகாப்புக்கு ஸ்டீயரிங் வீலையும் லாக் செய்யலாம். அதையும் மீறி உங்கள் கார் ஸ்டார்ட் ஆனால்? நீங்கள் பிரேக்கை அழுத்தாமலேயே கார் பிரேக் பிடித்தால்? மியூசிக் சிஸ்டம் தானாகப் பாட ஆரம்பித்தால்..... இது எல்லாம் கற்பனை இல்லை. உண்மையிலேயே நடக்கக் கூடிய ஆபத்துகள்தான்!

 பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபெராரி, லம்போகினி என பல நவீன கார்கள் இப்போது ஏகப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் புரோக்ராம் தொழில்நுட்பம் மூலம் இயங்குகின்றன. இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை 'ஹேக்’ செய்து, உங்கள் காரில் பிரேக் பிடிக்காமல் செய்ய வைக்க முடியும்; எங்கோ இருந்து கொண்டு உங்கள் காரின் மியூசிக் சிஸ்டத்தில் பாடல்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியும்; கார் ஓட்டிக் கொண்டு இருக்கும்போதே உங்கள் காரை ஆஃப் செய்ய முடியும் என்கிறார்கள், கார் ஹேக்கிங் தொடர்பாக ஆய்வுகள் செய்திருக்கும் வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்கள்.

கார்களில் இப்போது ப்ளூ -டூத், பென் டிரைவ், வை-ஃபை வசதிகள் வந்து விட்டன. இதில், பென் டிரைவ் மூலமா கவோ அல்லது ப்ளூ-டூத் மூலமாகவோ வைரஸை அனுப்பி காரில் உள்ள எலெக்ட்ரானிக் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியுமாம். எங்கோ இருந்து கொண்டு ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாக கார் கதவுகளைத் திறக்கவும், இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள்! வெறும் ஆய்வோடு நில்லாமல், இரண்டு கார்களை இதன்படி ஹேக் செய்து காட்டி அலற வைத்திருக்கிறார்கள் பல்கலைக் கழக மாணவர்கள்.

கார் ஹேக்கிங் செய்தி, உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில், ''காரின் எலெக்ட்ரானிக் சிஸ்டத்துக்குள் அவ்வளவு சாதாரணமாக வைரஸ்களை அனுப்பி கட்டுப்படுத்த முடியாது. உச்சகட்டப் பாதுகாப்புடன் காரின் எலெக்ட்ரானிக் புரோக்ராம் அமைக்கப்படுகின்றன'' என்று விளக்கம் கொடுத்திருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்!

உஷாருங்கோ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick