ஃபீனிக்ஸ் பறவையாகுமா ஹோண்டா?

மார்க்கெட் ப்ளான்

 

ஹோண்டா என்றால், சூப்பர் டெக்னாலஜி என்பது அடையாளம். உலகின் மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவருகிறது. இந்தியாவில் கால் பதித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 5 லட்சம் கார்களை விற்பனை செய்து முடித்திருக்கிறது ஹோண்டா. இதே காலகட்டத்தில் சென்னையில் தொழிற்சாலையைத் துவக்கிய ஹூண்டாய், இதுவரை 20 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்து இருப்பதோடு, வெளிநாடுகளுக்கு மட்டுமே 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. 

இந்தியாவில் பெட்ரோலின் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டு இருக்கும் நிலையில், வெறும் பெட்ரோல் கார்களை மட்டுமே நம்பியிருக்கும் ஹோண்டாவால், இந்திய ரேஸில் முந்த முடியவில்லை. டீசல் கார் இல்லை; 2-4 லட்ச ரூபாயில் சின்ன கார் இல்லை; அதிக சர்வீஸ் மற்றும் ஷோ ரூம்கள் இல்லை; பிரீமியம் பிராண்ட் என்ற இமேஜ் - இவை எல்லாம் சேர்ந்து இந்தியாவில் ஹோண்டாவின் வளர்ச்சியைப் பதம் பார்த்துவிட்டன. ராஜஸ்தான் மாநிலம் டபுகரா மாகாணத்தில் 2008-ம் ஆண்டே புதிய தொழிற்சாலையைக் கட்டி முடித்தது ஹோண்டா. 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தத் தொழிற்சாலையில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தயாரிப்புப் பணிகள் துவங்கவே இல்லை. காரணம், நொய்டா தொழிற்சாலையை அதனால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. ஆம், நொய்டா தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1,20,000 கார்களைத் தயாரிக்க முடியும். ஆனால், தற்போது இங்கே வெறும் 60,000 கார்கள் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. இப்போதைக்கு நம் நாட்டில் ஹோண்டாவின் மார்க்கெட் அவ்வளவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்