பஜாஜை நெறுக்கும் ஹோண்டா!

 

பிரீமியம் பைக் தயாரிப்பாளர் என்ற இமேஜை மறந்து, கீழே இறங்கி அடிக்கிறது ஹோண்டா. ஹீரோ நிறுவனத்துடன் இருந்த கூட்டணியை முற்றிலும் முறித்துவிட்ட ஹோண்டா, இந்தியாவின் இரண்டாவது பெரிய பைக் தயாரிப்பாளர் என்ற பெருமையை எட்டிவிட்டது. 'இல்லை... இல்லை... நாங்கள்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஹோண்டா, ஸ்கூட்டர்களின் விற்பனையையும் சேர்த்து பெருமை அடித்துக்கொள்கிறது’ என்று பஜாஜ் சமாளித்தாலும், ஹோண்டா மிக மிகத் தெளிவாக இருக்கிறது. 

கார்கள் இருக்கும் வீட்டிலும்கூட மார்க்கெட் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல... என கார்களைப் பயன்படுத்துவதைவிட மோட்டார் சைக்கிள்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். மோட்டார் சைக்கிள்களில் குறிப்பாக, கியர் இல்லாத ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள்தான் பெரும்பாலானவர்களின் சாய்ஸ். இதில், பொருட்களை வைக்க நிறைய இடம் இருக்கிறது; டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டு சென்றுவிட முடியும்;  கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை... என்று ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் தேவைக்குக் காரணங்கள் அதிகம். மேலும், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் தேவை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. அதாவது, 7 சதவிகிதமாக இருந்த ஸ்கூட்டர்களின் விற்பனை, 14 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்