டாக்ஸி

 

சுற்றுலா வாகனங்களுக்கு, தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வரி விதிப்புமுறைக்கு, சாலையில் தொடங்கி சட்டசபை வரை எதிர்ப்பு! வாகன வரி விதிப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்த தமிழக அரசு, அதை உடனடியாக ஏப்ரல் முதல் தேதியில் அமல்படுத்திவிட்டது. புதிதாக அமலுக்கு வந்திருக்கும் இந்தச் சட்டத்தின்படி, தனி நபர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாகனங்களுக்கு ஆயுள் வரி விதிப்பதைப் போல, வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் டூரிஸ்ட் வாகனங்களுக்கும் ஆயுள் வரி கட்ட வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கத் தோன்றும். 

எந்த ஒரு தனி நபரும் தன்னுடையை காரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மாதத்தின் 30 நாட்களும் ஓட்டுவது இல்லை. அதனால், தனி நபர் வாகனத்தின் பயன்பாடு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரைகூட நீடிக்கும். ஆனால், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் சுற்றுலா வாகனம், வாரத்துக்கு ஏழு நாட்களும் ஓடிக் கொண்டே இருப்பதால், அந்த வாகனம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே நல்ல நிலையில் உழைக்கும். அதனால்தான், இதற்கு முன் இருந்த வாகன வரி விதிப்புச் சட்டத்தில், சுற்றுலா வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே சீலிங் முறையில் வரி விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது, 15 ஆண்டுகளுக்கு ஆயுள் வரி செலுத்தச் சொல்லி சுற்றுலா டாக்ஸி தொழிலையே கலகலக்க வைத்திருக்கிறது தமிழக அரசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்