நகரும் வீடு... பறக்கும் சோஃபா!

கா.பாலமுருகன்  பொன்.காசிராஜன் 

 

ட்டோமொபைல் ஆர்வலர்களில் தனி வகையைச் சேர்ந்தவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுதாகர் யாதவ். விசித்திரமான கார் தயாரிப்பில் கின்னஸ் சாதனை, லிம்கா ரிக்கார்டு என உலக அளவில் பிரபலமான சுதாகர், தான் உருவாக்கிய கார்களைக் கொண்டு ஒரு கார் மியூஸியமே நடத்தி வருவது பழைய செய்தி. ஹைதராபாத்துக்குச் சுற்றுலா வரும் பயணிகள் சார்மினாரையும், ஹூசைன் சாகர் ஏரியையும் பார்த்த கையோடு, இவரது 'சுதாகார்ஸ்’ மியூஸியத்துக்கு செல்லத் தவறுவது இல்லை. அதுவும் விடுமுறை நாட்களில் இவரது மியூஸியத்தில் கூட்டம் அள்ளுகிறது. ஃபுட் பால், கிரிக்கெட் பேட், ஷூ, கம்ப்யூட்டர், கட்டில், சூட்கேஸ், கத்திரிக்காய் என இவர் தயாரித்த விசித்திர வாகன வகைகளின் பட்டியல் நீளமானது. இது போன்ற வாகன வகைகளைத் தயாரிப்பதில் உலக அளவில் முன்னோடியாகத் திகழ்கிறார் இந்த சுதாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்