வாம்மா மின்னல்!

 

லெஸ்லி போட்டர்ஃபீல்ட்... இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. உலகிலேயே அதிக வேகத்தில் பைக் ஓட்டிய, 'உலகின் வேகமான பெண்மணி’ என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர்தான் இந்த லெஸ்லி போட்டர்ஃபீல்ட். மணிக்கு 376 கி.மீ வேகத்தில் பறந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் லெஸ்லி, பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். கடந்த மாதம் ரேஸ் பைக்குகளுக்கு என எந்த மாற்றமும் செய்யப்படாத சாதாரண பைக்கில், 321 கி.மீ வேகத்தில் பறந்து சாதனை படைத்திருக்கிறார். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் லெஸ்லி. 16 வயதில் துருப்பிடித்திருந்த பக்கத்து வீட்டு பைக்கை, வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, அதை முழுவதுமாக அசெம்பிள் செய்து ஓட்டும் அளவுக்கு பைக் மீது தீவிரக் காதல் கொண்டவர். 2002-ம் ஆண்டில் யமஹா நிறுவனத்தில் வேலை பார்த்த லெஸ்லி, அதன் பிறகு தீவிர பைக் ரைடராகவே மாறிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்