2012 ராஸிக்கு ராசியா?

மோட்டோ ஜீபி

 லைசென்ஸ் வாங்குவதற்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார் ஸ்பெயினின் ஜார்ஜ் லாரன்சோ. 2010-ம் ஆண்டு மோட்டோ ஜீபி சாம்பியனான ஜார்ஜ் லாரன்சோ, பொதுச் சாலைகளில் பைக் ஓட்டுவதற்கு இன்னும் லைசென்ஸ் எடுக்கவில்லை! கார் லைசென்ஸ் மட்டுமே வைத்திருக்கிறார். 2-வீலர் லைசென்ஸுக்குக்காக இப்போது பொதுச் சாலைகளில் பைக் ஓட்டி பயிற்சி எடுத்து வருகிறார். சாதாரண சாலைகளில் அவர் வலம் வரும் பைக்... யமஹா YBR 250R!

இதற்கிடையே மலேசியாவில் மோட்டோ ஜீபி பந்தயத்துக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி ரேஸ் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இரண்டு நாள் பயிற்சி ரேஸில், முதல் நாளில் ஜார்ஜ் லாரன்சோ முதலிடம் வென்றார். முதல் நாள் பயிற்சியில் நடப்பு சாம்பியன் கேஸி ஸ்டோனர் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம் நாள் ரேஸில், புயலெனப் புறப்பட்ட கேஸி ஸ்டோனர் முதலிடம் பிடித்தார். இவரது டுகாட்டியின் வேகம் பென் ஸ்பீஸின் யமஹாவைவிட ஒரு விநாடி அதிகம். அதேபோல், ஜார்ஜ் லாரன்சோ சில மைக்ரோ விநாடிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடம் பிடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்