இது நம்ம ஊரு கம்பெனி!

 

மிழகத்தின் கடைக்கோடி கிராமமாக இருந்தாலும், அங்கே நிச்சயம் டிவிஎஸ் வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் - எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனம். 1978-ம் ஆண்டு மொபெட் தயாரிப்பைத் துவங்குவதற்காக தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரில் டிவிஎஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த 'டிவிஎஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டது டிவிஎஸ். 

வெளிநாட்டு பைக் தயாரிப்பாளரான ஜப்பானின் சுஸ¨கி நிறுவனத்துடன் இணைந்து, 1982-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பைத் துவக்கத் தயாரான இந்தியாவின் முதல் நிறுவனம் டிவிஎஸ். 1984-ம் ஆண்டு முதல் டிவிஎஸ் - சுஸ¨கி கூட்டணியில் பைக்குகள் வலம் வரத் துவங்கின. முதல் பைக்காக டிவிஎஸ்-சுஸ¨கி 'இந்த் - சுஸ¨கி’ அறிமுகப்படுத்தப்பட்டது. சுஸ¨கி சாமுராய், சுஸ¨கி ஷோகன், சுஸ¨கி ஃபியரோ என இந்தியா முழுவதும் டிவிஎஸ் சுஸ¨கி கூட்டணியில் வெளிவந்த பைக்குகள் சக்கைப் போடு போட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்