ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

 

ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்து, சாம்பியன் பட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். சிங்கப்பூர், ஜப்பான், கொரியா என கடந்த மாதங்களில் நடைபெற்ற மூன்று ரேஸ்களிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தக்க வைப்பதில் தீவிரமாக இருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். 

இந்த ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில், முதல் ஏழு ரேஸ்களில் ஏழு வீரர்கள் மாறி மாறி வெற்றி பெற்றனர். இதனால், சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்ற பரபரப்பு எழுந்தது. இதற்கு அடுத்து, அதிக வெற்றி மற்றும் இரண்டாம் மூன்றாம் இடங்கள் மூலம் சாம்பியன் ஷிப் பட்டியலில் முன்னிலை பெற்றார் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ. இப்போது ஹாட்ரிக் வெற்றி மூலம் அலான்சோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். இருப்பினும், இருவருக்கும் வெறும் ஆறு புள்ளிகள்தான் வித்தியாசம். அதனால், பரபரப்பான கிளைமாக்ஸை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது ஃபார்முலா-1.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்