பனிமூட்டம்... குளிர் காற்று... ஜெட்டா!

சென்னை to சிக்மக்ளூர் - கலசா

 

டெஸ்ட் டிரைவுக்காக ஃபோக்ஸ்வாகனின் அப்டேட்டட் ஜெட்டா 1.4 பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார், நமக்காக அலுவலகம் வந்த சமயம், பெங்களூருவில் உள்ள மோ.வி வாசகர் அவிநாஷ், கார் வாங்கும் விஷயமாக நம்மை தொலைபேசியில் அழைத்தார். அப்போது அவரிடம், ''பெங்களூருக்கு அருகே சுற்றுலா அறிமுகம் இல்லாத ஏதாவது புதிய இடம் உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டபோது, ''நிறைய இருக்கிறது. சிக்மக்ளூர் மலைப் பகுதியில் கலசா என்ற இடத்தில் உள்ள ஹோம் ஸ்டேவுக்கு நாளை செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா?'' என்றார். உடனே ஒப்புக் கொண்டு, பரபரவென தயாராகி பெங்களூருவை நோக்கி ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாவைக் கிளப்பினோம். 

புதிய ஜெட்டாவின் இன்ஜின் சற்று பவர் குறைவாக இருந்தது போன்ற உணர்வு. ஆனால், நெடுஞ்சாலையில் 140-150 கி.மீ வேகத்தை மிக எளிதாகத் தொட்டது. வேகமாகச் செல்வதே தெரியாமல் மிகச் சிறப்பான பயண அனுபவத்தைத் தந்தது ஜெட்டா. அதிவேகமாகச் செல்லும் கார் இது இல்லை என்றாலும், குறை சொல்லும்படி எதுவும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்