எந்தக் காலத்திலும் மவுசு குறையாது!

 

ன்றைக்கும் மவுசும், மரியாதையும் குறையாதவை வின்டேஜ் வாகனங்கள். 1920-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார் - பைக்குகளின் அணிவகுப்பு, சமீபத்தில் சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இதில் கலந்து கொண்டன. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வரும் இந்த வாகனங்களை 'சென்னை ஹரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ ஆண்டுதோறும் கார் ராலியாக நடத்தி, வாகன உரிமையாளர்களை உற்சாகப்படுத்துகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்ச்சியை, ஆடித் திருவிழா போலக் கொண்டாடி மகிழ்கின்றனர் வின்டேஜ் ஆர்வலர்கள். இந்த ஆண்டு திருவிழாவைத் தொடங்கி வைக்க நடிகை சோனியா அகர்வால் வந்திருந்தார். ஒவ்வொரு காரின் சிறப்புகளையும், வெளிவந்த காலகட்டத்தையும் கேட்டு ஆச்சரியமானார் சோனியா. சென்னை ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்பைச் சேர்ந்த கைலாஷ் பேசியபோது, 'ஹெரிடேஜ் விரும்பிகளையும், பழைமை வாய்ந்த கார்களைப் பற்றியும் அனைவரும் அறிந்துகொள்ள, எங்கள் கிளப் சார்பில் இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட அதிகமானோர் பங்கு பெற்றுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்