ரோரிங் ரைடர்ஸ்! | jawa club | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2013)

ரோரிங் ரைடர்ஸ்!

 

ஜாவா பைக்கை நம்பி நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஆனால், அதைத் தகர்த்திருக்கிறார்கள் ஜாவா பைக் கிளப்பைச் சேர்ந்தவர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் ஜாவா தாங்கும் என்பதை, தங்களுடைய வெற்றிகரமான 5-ஆவது ரைடின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ரோரிங் ரைடர்ஸ் குழுவினர். முதல் ஆண்டு ஏலகிரி சென்றவர்கள், கொடைக்கானல், கோழிக்கோடு, மூணாறு என ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் ஊருக்குப் பயணித்தவர்கள், இந்த 5-வது ஆண்டில் ஏற்காடுக்கு ரைடு சென்றுவந்திருக்கிறார்கள்.

 இந்தக் குழுவைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் உற்சாகமாகப் பேசினார். ''எங்களுடைய இந்த ரைடுகளின் நோக்கமே ஜாவா பைக்கின் தனித் தன்மை மற்றும் உரிமையாளர்களின் ஒற்றுமையைக் காண்பிக்கத்தான். ஒரே இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஜாவா பைக்குகளை எங்களுடைய ரைடின் போது மட்டும்தான் பார்க்க முடியும். இந்த முறை ஏற்காடு ரைடுக்கு மொத்தம் 87 பேர் சென்னையில் இருந்து சென்றோம். சேலத்தில் இருந்து 15 பேர் வந்தார்கள். 1954-ம் ஆண்டு பெராக் மாடல் ஜாவா பைக் ஒன்றை பெங்களூருவில் இருந்து எடுத்து வந்திருந்தார் ஒருவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க