வணக்கம்!

விருதுகளுக்கு எப்போதுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு விருது உண்மையிலேயே தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும்போது, அதை வழங்குபவர்களுக்கும் தானாகவே பெருமை சேரும். ஒரு விருதை வழங்குவதற்கு முன்பு பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் போன்ற தொழில்நுட்பம் தொடர்பான அத்தனை விஷயங்களையும் ஆழமாக அலசி ஆராய்வதோடு, அதன் காலம், சூழ்நிலை, போட்டியாளர்கள் என அத்தனை விஷயங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, விருப்பு வெறுப்பு இல்லாமல் அந்த விருது வழங்கப்படும்போது... அதைப் பெறுகின்றவர்களைப்போலவே வழங்குபவர்களுக்கும் பெருமையால் உள்ளம் களிப்படையும். கடந்த இதழில் நாம் வழங்கிய மோட்டார் விகடன் விருதுகளின் சிறப்பு அது. அது மட்டுமல்ல, ஆங்கில ஆட்டோமொபைல் இதழ்கள் துவங்கி, பிராந்திய மொழி ஆட்டோமொபைல் இதழ்கள் அனைத்துக்கும் முன்னதாக, மோட்டார் விகடன் விருதுகள் வெளியானதில் ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், நமது மோட்டார் விகடனின் விருதுகளை ஒட்டியே பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளின் விருதுகளும் அமைந்திருந்ததைப் பார்க்கும்போது, நமது மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்