பாலைவனத்தில்ஜ் பறந்த கப்பல்கள்!

 

'வருகிறீர்களா தார் பாலைவனப் பகுதிகளுக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம்?’ என நம்மை அழைத்தது டாடா மோட்டார்ஸ். இந்த ஃபுல் த்ராட்டில் டிரைவில், டாடா எஸ்யூவி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். மொத்தம் நான்கு நாட்கள் பயணம். பிகானெர், ஜெய்சல்மர், கிம்சார், ஜெய்ப்பூர் என நான்கு இடங்களுக்குச் செல்வதுதான் திட்டம். இதில், தென் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட ஒரே ஆட்டோமொபைல் பத்திரிகை மோட்டார் விகடன் மட்டுமே! 

முக்கால்வாசிப் பயணத்தில் நாங்கள் சென்ற சாலைகளை, சாலை என்றே சொல்ல முடியாது! நாங்கள் டெல்லியை அடைந்ததும் டாடா ஆரியாவைக் கையில் கொடுத்து, பயணத் திட்டத்தை விளக்கினார்கள். முதல் நாள் பயணம் டெல்லியில் இருந்து பிகானெர் வரை. காலை 9 மணிக்குத் துவங்கிய நம் பயணம் தேசிய நெடுஞ்சாலையில் 40 கி.மீ தாண்டியவுடன் ரெவாரி என்ற இடத்தை அடைந்தோம். இந்த நெடுஞ்சாலை வேலைகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பதால், ஆங்காங்கே சின்னச் சின்ன டைவர்ஷன்கள் இருந்தன. ஆனால், சாலை ஒழுக்கத்தில் வட இந்தியர்களைவிட நம் ஊர்க்காரர்கள் எவ்வளவோ பெட்டர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்