சண்டைச் சேவல்கள்!

 

ஸ்ட்ரீட் ரேஸ் நடக்கும் சென்னை சாலையில், பொறுப்பாக கிளப் வைத்து பைக் ஓட்டுகிறார்கள் சில கல்லூரி மாணவர்கள். ''பைக் வெச்சிருக்கறவங்க ஒண்ணு சேர்ந்து சும்மா ரவுண்ட் அடிச்சா, அதுக்குப் பேரு பைக் கிளப் இல்லை சார். கிளப்புக்கு சில விதிமுறைகள் இருக்கு. அதை கடைசி வரைக்கும் கடைப்பிடிக்கணும். அதுக்குப் பேருதான் கிளப்னு சொல்லணும். அப்படி நாங்களே ஒவ்வொண்ணா பார்த்துப் பார்த்துச் செதுக்கி உருவாக்குன கிளப்தான் எங்க சேன்ட்டிக்ளியர்ஸ் (CHANTICLEERS)'' என்று அசத்தல் அறிமுகம் கொடுக்கிறார் பைக் கிளப்பைச் செதுக்கிய நவீன் ஆண்டனி. 

'பைக்குனாலே எனக்கு உசுரு. சின்ன வயசுல இருந்தே பைக் மேல அப்படி ஒரு வெறி. வீட்டுல ஐஸ் வெச்சு, அடம் பிடிச்சு யமஹா ஆர்-15 பைக் வாங்கினேன். வாங்குன அன்னைக்கே புதுச்சேரிக்கு சோலோவா போயிட்டு வந்தேன். ஏதோ நிலாவுக்கே போய் வந்தது மாதிரி ஒரு ஃபீல். ஆனாலும், ஏதோ ஒண்ணு மிஸ் ஆனது மாதிரியே இருந்தது. கூடவே நிறைய பைக் ஃப்ரெண்ட்ஸ் இருந்தா இன்னும் சூப்பரா இருக்குமேனு யோசிச்சேன். அப்பதான் எனக்கு ஞானோதயம் வந்தது. நான் பெற்ற இன்பத்தை வையகமும் பெற வேண்டாமா? உடனே என் நண்பன் செந்தில்கிட்ட ஒரு பைக் கிளப் ஆரம்பிக்கலாம்னு சொன்னேன். 'அட, ஃபேஸ்புக்குல ஒரு பைக் குரூப் ஆரம்பிச்சுட்டாப் போச்சு’ன்னு ஐடியா கொடுத்தான்!' என்று சொல்லவும், உள்ளே புகுந்தார் செந்தில் அர்ஜீன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்