ரீடர்ஸ் ரிவியூ - ஸ்கோடா ஃபேபியா பெட்ரோல்

ஜெர்மன் ஆயுதம்!

 

''புத்தம் புது கார்களை மட்டுமே டெஸ்ட் டிரைவ் செய்கிறீர்கள். குறைந்தது 10,000 கி.மீ தூரமாவது ஓடினால்தான் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது தெரியும். அதுவும், காரைப் பயன்படுத்துபவரே சொன்னால், இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?'' என்று தொலைபேசியில் உரிமையோடு மோ.வி வாசகர்கள் சிலர் கேட்டுக்கொண்டதின் பேரில், ரெடி... ஸ்டார்ட்... பர்ஸ்ட் கியர்!

''கா ர் மீதான மயக்கம் சிறுவயதில் இருந்தே எனக்கு இருக்கிறது. டிவிஎஸ்-50 மொபெட்தான் என் முதல் வாகனம். மருத்துவப் படிப்பு முடித்த பிறகு டிவிஎஸ் விக்டர் பைக் வாங்கினேன். இன்றும் சேலம் நகருக்குள் மருத்துவமனை சென்று வர  அதைத்தான் பயன்படுத்துகிறேன். கார் வாங்கும் காலத்தை எதிர்நோக்கி பல்லாண்டுகள் காத்திருந்தேன். முதன்முதலாக 2004-ல்தான் என் கார் வாங்கும் கனவு சாத்தியமானது. என் முதல் கார் மாருதி ஆல்ட்டோ. இந்தியர்களின் முதல் காராக பெரும்பாலும் இருப்பது மாருதி ஆல்ட்டோதான். எனவே, அந்த பாரம்பரியத்தை நானும் காப்பாற்றினேன். நானும் கார் வாங்கி விட்டேன் என்ற குதூகலம் கொப்பளித்த காலம் அது. கார் வாங்கிய பிறகுதான் அதன் நுணுக்கங்களும், தொழில்நுட்பங்களும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தி, மேலும் மேலும் அந்தத் துறை சார்ந்த விஷயங்களின் கவனம் செலுத்தத் தூண்டியது. விகடன் குழுத்தில் இருந்து வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளின் வாசகன் நான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்