ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 - இனி கொண்டாட்டமே!

 

'புல்லட்’ என்பது மோட்டார் சைக்கிள்கள் வரலாற்றில் சாதாரணப் பெயர் கிடையாது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளை 'புல்லட்’ என்றுதான் இன்றும் பலர் அழைக்கின்றனர். இதுதான் நம் நாட்டின் கடைக்கோடிக்கும் ராயல் என்ஃபீல்டின் பெயரைக் கொண்டு சேர்த்தது. இப்போது, புதிய 499 சிசி இன்ஜினுடன் புல்லட் வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் ஆரம்பம். 

டிசைனைப் பொறுத்தவரை, பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்கவில்லை. பாரம்பரிய புல்லட் வடிவமைப்பை அப்படியே வைத்திருக்கிறது. அதுதான் நல்லதும்கூட. புதிதாகத் தெரிவதற்காக சில ஸ்டைலிங் வேலைகளைச் செய்திருக்கிறார்கள். க்ரோம் கவரிங்கொண்ட ஹாலோஜன் ஹெட்லைட், ரியர்வியூ கண்ணாடி க்ரோம் பூச்சுடன் வட்ட வடிவில் இருப்பது கிளாஸிக் லுக் தருகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் முறையில் இயங்குகிறது. ஆம்பியர்(பேட்டரி) மீட்டரை மட்டும் தனியாகக் கொடுத்திருக்கிறார்கள். புல்லட்களின் அடையாளமான பெட்ரோல் டேங்க்கில் வரையப்பட்டிருக்கும் கோடுகள் கையால் வரைந்தவை. பின் பக்கம் கிளாஸிக் மாடலில் இருப்பதுபோல, வட்ட வடிவில் டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தரம் சற்று முன்னேறி இருந்தாலும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்