ஹோண்டா சிபி ட்ரிக்கர் VS யமஹா FZ-S

150 சிசி மார்க்கெட்டில் போட்டா போட்டி!

 

விற்பனையில் சரிந்துகொண்டிருந்த யமஹாவைத் தூக்கி நிறுத்திய பைக் யமஹா FZ. 150 சிசி மார்க்கெட்டை பல்ஸர் பைக்குகள் ஆக்கிரமித்திருந்த சமயத்தில், ஆர்-15 மாடலைத் தொடர்ந்து FZ16 பைக்கை அறிமுகப்படுத்தியது யமஹா. இது, 150 சிசி மார்க்கெட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. நேக்கட் ஸ்டைல், ட்யூப்லெஸ் டயர், சிறப்பான கையாளுமை என FZ பைக்கின் தனிச் சிறப்புகள் அதிகம். FZ16 பைக்கைத் தொடர்ந்து FZ-S மற்றும் ஃபேஸர் பைக்குகளை அறிமுகம் செய்த யமஹாவுக்கு, தொடர் வெற்றிதான். 

யமஹாவுடன் நேருக்கு நேர் மோதும் மற்றொரு ஜப்பான் பைக் நிறுவனமான ஹோண்டா, யூனிகார்னைத் தொடர்ந்து யூனிகார்ன் டேஸ்லர் எனும் ஸ்டைலான 150 சிசி பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால், இது யமஹாவுக்கு சரியான போட்டியே இல்லை என்பதைக் காலம் உணர்த்த, இப்போது சிபி ட்ரிக்கர் எனும் 150 சிசி நேக்கட் பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது. நேக்கட் என்றால் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க்கைச் சுற்றிலும் ஃபேரிங் இல்லாமல் இருக்கும் பைக் என்பது அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்