எங்கேயும் எப்போதும்!

 

ழவர்களின் நண்பன் என மண் புழுவைச் சொல்வார்கள். ஆனால், நவீன விவசாயத்தில் விவசாயிகளின் உற்ற தோழனாக இருப்பது டிராக்டர்தான். ஒரு காலத்தில் பெரிய பண்ணையார்களிடம் மட்டுமே இருந்த டிராக்டர், இன்றைக்கு சிறு, குறு விவசாயிகளிடமும் இருக்கிறது. விவசாயத்தைத் தாண்டி டிப்பர், டிரைலர், டேங்கர் என தொழில் சார்ந்த பணிகளுக்கும் டிராக்டர் பயன்பாடு விரிவடைந்துள்ளது. 

மஹிந்திரா, டாஃபே, பஜாஜ், ஜான்டியர், நியூஹாலந்த், ஸ்வராஜ் என பல டிராக்டர்கள் இருந்தாலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மாடல் கோலோச்சும். தேனி மாவட்டத்தில் டாஃபே என்றால், திண்டுக்கல் மாவட்டத்தில் மஹிந்திரா அதிகம் விற்பனையாகும்.  ஏரியாவுக்குத் தகுந்ததுபோல டிராக்டரின் பயன்பாடு மாறுபடும். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் மஹிந்திரா டிராக்டர் பற்றி திண்டுக்கல் 'ராம் டிராக்டர்ஸ்’ நிறுவனத்தின் சர்வீஸ் மேனேஜர் கோபிநாத் விரிவாகப் பேசினார். ''இன்னிக்கு விவசாயத்துல வேலையாட்கள் பற்றாக்குறை அதிகமா இருக்கு. அதை நிவர்த்தி செய்றதே டிராக்டர்தான். உழவு, வரப்பு கட்டுதல், பார் அமைத்தல், விதைப்பு, களை எடுப்பு, அறுவடைனு எல்லா வேலைகளுக்கும் டிராக்டர் வந்தாச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்