கான்டஸா புகழ் பரப்புவோம்!

கான்ட்டஸா கிளப்

 

ரு காலத்தில் விஐபிகளின் காராகக் கருதப்பட்ட கான்டஸா, இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்திய ஆட்டோமொபைல் துறை, அளவாக பெற்று வளமாக வாழ்ந்த காலத்தில், கதாநாயகன் இந்த கான்டஸா. அப்போது சொகுசு கார், எக்ஸியூட்டிவ் கார் என சொல்லிக் கொள்ள நமக்கு இருந்தது இது மட்டுமே! தற்போது இந்த காரின் நிலை கவலைக்கிடம் ஆகிவிட்டது. ஆனால், விடுவார்களா கார் காதலர்கள்? 

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தயாரிப்பான கான்டஸா கார் வைத்திருப்பவர்கள், 'கான்டஸா ஓனர்ஸ் கிளப்’ என்ற பேனரில் சமீபத்தில் நீலகிரியில் இருக்கும் குன்னூரில் தங்களது கார்களுடன் ஒன்றுகூடினர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து 23 பேர் கலந்துகொண்டனர். 1987 முதல் 2003-ம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்த கான்டஸா கார்களை ஸ்டீல் பம்பர் மாடல், இந்தியன் இஸ¨சு, மாடிஃபைடு கான்டஸா என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவற்றில் சிறந்த கார்களுக்குப் பரிசுகள் வழங்கினார்கள். ஓவர் ஆல் வின்னராக நாகர்கோவிலைச் சேர்ந்த ரோஹித் கார் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்