நெடுஞ்சாலை வாழ்க்கை!

 

டிரைவர். இந்த வார்த்தைக்கும், வேலைக்கும் மதிப்பில்லாத தேசம் இது. இதில், லாரி டிரைவர்களின் நிலையைத் தனியே சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. திருமணச் சந்தையில் தவிர்க்கப்படும் பட்டியலில் முதலில் இருப்பவர்கள்; அதிகாரவர்க்கத்தால் அடிமைகளாக உழல்பவர்கள்; வழிப்பறி, கொள்ளை, கொலைக்கு ஆட்படுபவர்கள்; தங்களது சுய மரியாதையையும் ரௌத்திரத்தையும் வீட்டில் பத்திரமாகப் பூட்டிவைத்துவிட்டு, நெடுஞ்சாலையில் ஆட்டிவைக்கும் அங்குசங்களுக்குக் கட்டுப்பட்ட யானைகளாக வலம் வருபவர்கள். இப்படி சமூக ரீதியாகவே ஒதுக்கப்பட்டவர்களாக இந்தச் சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், நம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி, இந்த டிரைவர்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால், தொழிலுக்கான கௌரவத்தை, ஆளுமையை ஒருபோதும் பெற முடியாமல் தவிக்கிறார்கள் டிரைவர்கள். ஒவ்வொரு முறையும் டீசல் விலை உயர்த்தப்படும்போது கண்டனம் எழுப்பும் இவர்களது குரல், அடுத்த சில நாட்களில் அமுக்கப்பட்டு ஈனஸ்வரத்தில் முனகுவதுகூட நமக்குக் கேட்பது இல்லை. 

எரிபொருள் விலை அதிகரிக்கும்போதெல்லாம் உயரும் பொருட்களின் விலைகளுக்கு, போக்குவரத்துச் செலவையும் - லாரி வாடகை உயர்வும்தான் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே லாரி வாடகையும், போக்குவரத்துச் செலவும் இந்தச் சமூகம் சித்தரிக்கும் அளவுக்குக் கூடவில்லை என்பதே உண்மை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்