முந்தும் ஹீரோ... விரட்டும் ஹோண்டா!

பைக் மார்க்கெட்

 

டந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையான மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 38 லட்சம்! இந்தியாவில் விற்பனையாகும் 100 வாகனங்களில் 75 வாகனங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்தான். இதில், கார்களின் பங்கு 16 சதவிகிதம்தான்! மீதி கமர்ஷியல் வாகனங்கள். 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மோட்டார் சைக்கிள்களுக்கான மார்க்கெட் அதிகம் என்பதால் ஹோண்டா, யமஹா, சுஸ¨கி, ஹார்லி டேவிட்சன் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களான ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களுடன் மோதுகின்றன. 

இப்போது இரண்டு சக்கர வாகன மார்க்கெட் போர்க்களம் போலத்தான் இருக்கிறது. கடுமையான போட்டா போட்டி! ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, டிவிஎஸ், யமஹா என தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் சரி, பைக் சரி இல்லை என்றால் விற்பனை ஒரே மாதத்தில் காலி. இதனால், ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் நிறுவனமும் தான் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு பைக்கையும் கவனத்துடன்தான் களம் இறக்குகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்