உயிரோடு விளையாடிய காற்றுப் பைகள்!

 

''விபத்து என்பது விதி என்றால்... சீட் பெல்ட், காற்றுப் பைகள், ஏபிஎஸ், கவனம் என என்னதான் நாம் அலெர்ட் ஆக இருந்தாலும், பல நேரங்களில் மதியையும் மீறி, விதி என்கிற விபத்து வென்றுவிடுகிறது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ராஜதுரை விஷயத்திலும் அப்படித்தான்! 

தூத்துக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, தனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் மனைவி மற்றும் மகனுடன் சென்னைக்குத் திரும்பி இருக்கிறார் ராஜதுரை. கிட்டத்தட்ட 650 கி.மீ தாண்டிப் பயணம் செய்து, இரவு 11.30 மணி அளவில் சென்னை கத்திப்பாரா ஜங்ஷன் அருகே வந்தபோது, ''இன்னும் 2 கிலோ மீட்டர்தாண்டா தம்பி... அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன்!'' என்று தனது தம்பிக்கு போன் மூலம் தகவல் சொன்னார் ராஜதுரையின் மனைவி அனிதா. ஆனால், யாரும் இன்னும் வீடு போய்ச் சேரவில்லை. கத்திப்பாரா பாலம் அருகே கடுமையான விபத்தில் சிக்கி, இப்போது மருத்துவமனையில் சீரியஸ் கண்டிஷனில் இருக்கிறார் ராஜதுரை. அவரின் மனைவியும், குழந்தையும் இடுப்புக்குக் கீழே அடிபட்டு, சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்