யாருக்கும் சொல்லாதீங்க!

பெஜோ சிட்ரியான் குழுமத்தை வாங்கும் முயற்சியின் முதல்கட்டமாக, பெஜோ மோட்டார் சைக்கிள் நிறுவனத்தைக் கைப்பற்றி இருக்கிறது மஹிந்திரா. 218 கோடி ரூபாய்க்கு பெஜோ மோட்டார் சைக்கிள் பிரிவை, மஹிந்திரா 2 வீலர்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அடுத்த கட்டமாக, பெஜோ கார் நிறுவனத்தை மஹிந்திரா வாங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

நிஸானின் பட்ஜெட் பிராண்டான டட்ஸன் போலவே, நிஸானின் சொகுசு சூப்பர் கார் பிராண்ட், இன்ஃபினிட்டி. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் விற்பனையில் இருக்கும் இந்த இன்ஃபினிட்டி பிராண்டை, இந்தியாவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது நிஸான். இன்ஃபினிட்டி கார்கள் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் கார்களுக்குப் போட்டியாக இருக்கும். இவை வெளிநாட்டில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்