பாரீஸ் ஆட்டோ ஷோ!

ர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

bit.ly/1DhDXHSஉலகின் அழகிய நகரமான பாரீஸில், உலகின் அழகிய கார்கள் பல  அறிமுகமாகியிருக்கின்றன. மோட்டார் விகடன் போட்டோகிராபர் ஸ்டீவ்ஸ், பாரீஸ் ஆட்டோ  ஷோவில் எடுத்த படங்களில், இந்தியாவுக்கு வரப் போகும் கார்கள் பற்றிய ஒரு தொகுப்பு!

பாரீஸ் ஆட்டோ ஷோவின் முழுமையான கவரேஜ் பட ஆல்பத்திற்கு கிளிக்குக:   http://bit.ly/1DhDXHS

மினி - 5 டோர்

மினி - 5 டோர் மாடல், முதன்முறையாக பாரீஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 3 டோர் மாடலைவிட 161 மிமீ நீளம். இந்த ஆண்டின் இறுதியில் மினி 3 டோர் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கையோடு, மினி 5 டோர் மாடலும் விற்பனைக்கு வருகிறது. ‘மினி’ இப்போது ‘மினி’ இல்லை.
 
ஜாகுவார் XE

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி A4, மெர்சிடீஸ் பென்ஸ் C கிளாஸ் ஆகிய மூன்று ஜெர்மன் கார் கம்பெனிகளுக்குப் போட்டி வந்துவிட்டது. ஜாகுவார் XE செடான் கார், முதன்முறையாக பாரீஸில்தான் காட்சி வைக்கப்பட்டது. iQ எனப்படும் புத்தம்புதிய அலுமினியம் பிளாட்ஃபார்மில் தயாரான XE, புதிய இன்ஜினியம் (Ingenium) வகை இன்ஜின்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்

ஸ்விஃப்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை, பாரீஸ் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது சுஸூகி. ஃபேஸ்லிஃப்ட் என்பதால், காரின் முழுமையான டிஸைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், பெரிய பனி விளக்குக் குடுவை, புதிய அலாய் வீல்ஸ், பவர் ஃபோல்டிங் மிரர்ஸ், கீ-லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்றவைதான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள். அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய ஸ்விஃப்ட்..

ஹோண்டா CR-V ஃபேஸ்லிஃப்ட்

உலகில் தற்போது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவியான CR-V-ன் 2015 ஃபேஸ்லிஃப்ட் மாடலை, பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. காரின் முன்பக்கம் மிரட்டலான க்ரில், ஹெட்லைட்ஸ் கொண்டிருக்கிறது. க்ரில், ஹோண்டாவின் லேட்டஸ்ட் டிஸைன் அம்சமான ‘Solid Wing Face’ டிஸைன்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு புதிய CR-V விற்பனைக்கு வரும்.

மெர்சிடீஸ் AMG-GT

பாரீஸ் ஆட்டோ ஷோவில் அதிக மக்கள் கூட்டம் மொய்த்த கார், மெர்சிடீஸ் AMG-GTதான். மெர்சிடீஸ் லேட்டஸ்ட் ஸ்போர்ட்ஸ் காரான இதில் இருப்பது 4.0 லிட்டர் V8 Bi-Turbo இன்ஜின். இது 455 bhp, 502 bhp என இரண்டு டியூனிங்குகளில் சக்தியை அளிக்கும். போர்ஷே 911, ஜாகுவார் F-டைப் போன்ற கார்களுடன் போட்டி போடும் இது, ‘இந்தியாவுக்கு வருமா?’ என்று மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தினரிடம் கேட்டால், சஸ்பென்ஸ் கலந்த புன்னகையோடு கண் சிமிட்டுகிறார்கள்.

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

காலங்காலமாக இங்கு விற்பனையாகும், ஃப்ரீலேண்டர் காருக்குப் பதிலாக, அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது புதிய டிஸ்கவரி ஸ்போர்ட். இந்த காருக்கும் பாரீஸ் ஆட்டோ ஷோவில்தான் ‘அரங்கேற்றம்’ நடந்தது. 7 சீட்டர் எஸ்யுவியான இது, பார்க்க 5 சீட்டர் கார் போல இருக்கிறது. 2.0 லிட்டர், 2.2 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் இங்கு விற்பனைக்கு வரும். மற்றபடி, வழக்கமான லேண்ட் ரோவர் கார்களின் ஆஃப் ரோடு அனுபவம் இதிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வாகன் பஸாத்

புதிய தலைமுறை பஸாத் காரை, பாரீஸ் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்து பரவசப் படுத்தியது ஃபோக்ஸ்வாகன். புதிய MQB பிளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 2015 பஸாத், பழைய காரைவிட 85 கிலோ குறைவான எடை கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதங்களில் புதிய பஸாத் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

பாரீஸ் ஆட்டோ ஷோவின் முழுமையான கவரேஜ் படங்களை, விகடன் ஆன்லைனில் ஆல்பம் பகுதியில் காணலாம்! http://bit.ly/1DhDXHS

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick