டாடாவுக்கு கொடுக்க வேண்டிய கடனை மாருதி அடைத்துவிட்டது!

வேல்ஸ்

மாருதியின் அடையாளமாகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஆர்.எஸ்.கல்ஸி.  சுமார் 20 ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கல்ஸி, மாருதியின் கடை நிலை ஊழியர்களுக்கும் பரிச்சயமானவர்.

‘‘நான் 30 ஆண்டுகளாக மாருதியில் பணிபுரிந்து வந்தாலும், இன்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வெளியேவந்து, முதலில் சேர்ந்தது டாடா மோட்டார்ஸில்தான். எனக்கு முன்பாக மாருதியின் தலைமைப் பொறுப்பில் இருந்த மயங்க் பரேக், இப்போது டாடா மோட்டார்ஸில் சேர்ந்திருப்பதன் மூலம், மாருதி தன்னுடைய நீண்ட காலக் கடனை அடைத்துவிட்டது என்றே நினைக்கிறேன்” - செம ரிலாக்ஸ்டாக பேசுகிறார் கல்ஸி. ‘‘தரக் கட்டுப்பாடு, வாகனப் பரிசோதனை என தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்துவிட்டு டீலர்கள் நியமனம், மார்க்கெட்டிங் என ஏறக்குறைய விற்பனைத் துறையின் அத்தனை பிரிவுகளிலும் வேலை செய்த அனுபவம் எனக்கு உண்டு. மாருதி ஃபைனான்ஸ், மாருதி இன்ஷூரன்ஸ், ட்ரூ வேல்யூ, மாருதி டிரைவிங் ஸ்கூல் என்று பல முயற்சிகளை முன்னின்று ஆரம்பித்த அனுபவத்தையும் மாருதி எனக்குக் கொடுத்திருக்கிறது” என்றார் பெருமையுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்