வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இந்த மாதம் அறிமுகமாகவிருக்கும் கார்களின் பட்டியலைப் பார்த்தால், சவாலான காலங்கள் முடிந்து, தங்கமான தருணத்துக்குள் அடியெடுத்துவைத்துவிட்ட பரவசம் எழுகிறது. மாருதி சியாஸ், மஹிந்திராவின் புதிய ஸ்கார்ப்பியோ, மெர்சிடீஸ் பென்ஸ் GLA என நீளும் பட்டியலில், புதுப் பொலிவோடு மறு அறிமுகம் காணும் ஸ்கோடா ரேபிட், டொயோட்டா எட்டியோஸ், லிவா, ரெனோ டஸ்ட்டர் AWD, போக்ஸ்வாகன் வென்ட்டோ, செவர்லே செயில், செயில் U-VA சேர்ந்திருக்கின்றன. மாதந்தோறும் இத்தனை கார்கள் அறிமுகமானால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிதான். எந்தெந்த கார்கள் தங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்; அதில் எத்தனை கார்களை டெஸ்ட் டிரைவ் செய்வது; கடைசியாக எந்த காரை வாங்குவது என்று கேள்விக்குறிகளைத் தாண்ட முடியாமல், சில வேளைகளில் வாடிக்கையாளர்கள் திணறிவிடுவார்கள்.

எந்தத் திக்கலும் திணறலும் இல்லாமல் தீர்க்கமாக முடிவெடுக்க, இந்த இதழில் ஏராளமான தகவல்களும், டெஸ்ட் ரிப்போர்ட்களும் இடம்பெற்றிருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்ப்பியோவா அல்லது டாடா சஃபாரியா? ஸ்கோடா ரேபிட்டா அல்லது போக்ஸ்வாகன் வென்ட்டோவா? ஃபியட் அவென்ச்சுராவா அல்லது ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டா? கேள்விகளுக்கு விடை தேடும் கம்பாரிஸன் ரிப்போர்ட்ஸ் ரெடி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்