அன்பு வணக்கம்!

சேர்ந்திசைக்கு இருக்கும் அழகே தனி. அதேபோல, ஒரு பத்திரிகையின் உருவாக்கத்தில் வாசகர்களும் சேர்ந்து செயல்படும்போது, அதன் அழகு மேலும் மிளிரும்.
motor.vikatan.com வலைதளத்திலும், முகநூல் மற்றும் ட்விட்டரிலும் வாசகர்கள் அனுப்பிவைக்கும் ‘ஸ்பை’ புகைப்படங்களும், ‘விஷுவல் டேஸ்ட்’ புகைப்படங்களும், பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களும், எல்லோராலும் மிக ஆர்வமாக ரசிக்கப்படுவதில் மோட்டார் விகடன் மகிழ்கிறது. மாதம் ஒருமுறை பத்திரிகை வெளிவரும்போது, ஆவலோடு வாங்கிப் புரட்டி ரசித்து மகிழ்கிற அதே பரவசத்தை, இப்போது தினம் தினம் வழங்குகிறது மோட்டார் விகடன். புதுப்புது விஷயங்கள் பதிவேற்றம் ஆகிக்கொண்டே இருப்பதால், மோட்டார் விகடனின் வலைதளம், முகநூல் மற்றும் ட்விட்டருடன் எப்போதும் இணைந்திருங்கள்.

பலவிதங்களிலும் இந்த இதழ் உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். காரணம், 10 - 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், எந்த மிட் சைஸ் டீசல் செடான் வாங்குவது என்ற கேள்விக்கு விடை சொல்லும்விதமாக மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு ஃபியஸ்டா, நிஸான் சன்னி, ஹோண்டா சிட்டி, ஃபியட் லீனியா, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ரெனோ ஸ்காலா, ஸ்கோடா ரேபிட் ஆகிய ஒன்பது கார்களை அடுத்தடுத்து ஓட்டிப் பார்த்து ஒப்பிட்டு, இவற்றின் சாதகபாதகங்களை மிக நுட்பமாக அலசி ஆராய்ந்து சொல்லும் விரிவான ரிப்போர்ட், இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்