வெற்றியுடன் துவக்கிய ஹாமில்ட்டன் !

FORMULA - 1சார்லஸ்

துவங்கிவிட்டது திருவிழா. 2015-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 சீஸன் ஆஸ்திரேலியாவில் துவங்க, வெற்றியுடன் கணக்கைத் துவக்கியிருக்கிறார், நடப்பு சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்.

பழைய அணிகளில் புதிய வீரர்கள் என இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமான கூட்டணியோடு துவங்கியது ஃபார்முலா-1. கடந்த ஆண்டு வரை ரெட்புல் அணியில் இருந்த முன்னாள் சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல், இந்த ஆண்டு ஃபெராரி அணிக்காகக் களம் இறங்க, மெக்லாரன் அணிக்காகக் களம் இறங்க வேண்டிய முன்னாள் சாம்பியன் ஃபெர்னாண்டோ அலான்சோ மிஸ்ஸிங். காரணம், பிப்ரவரி 22-ம் தேதி, பார்சிலோனா ரேஸ் மைதானத்தில் மெக்லாரன் ஃபார்முலா-1 காரை டெஸ்ட் செய்துகொண்டிருந்தார் அலான்சோ. அப்போது காரை வேகமாக ஓட்டி டெஸ்ட் செய்தபோது, கார் கட்டுப்பாட்டை இழக்க, மிக மோசமான விபத்தில் சிக்கினார். மூளையில் அடிபட்டதால் நினைவுகளை இழந்த அலான்சோவுக்கு, 10 வயதுக்கு மேல் நடந்தது எதுவும் நினைவில் இல்லை. மார்ச் 3 வரை மருத்துவமனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பி சகஜநிலைக்குத் திரும்பினார் அலான்சோ. இருப்பினும், ஆஸ்திரேலிய ரேஸை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அலான்சோ கலந்துகொள்ளவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்